விஜயகாந்த் நல்லா இருக்காரு.. கொஞ்சம் மனிதநேயத்தோட நடந்துக்கோங்க : புகைப்படத்தை வெளியிட்ட பிரேமலதா!!!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2023, 9:59 pm

விஜயகாந்த் நல்லா இருக்காரு.. கொஞ்சம் மனிதநேயத்தோட நடந்துக்கோங்க : புகைப்படத்தை வெளியிட்ட பிரேமலதா!!!

கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரலில் பிரச்சினை இருப்பதால் அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருடைய உடல் சிகிச்சையை ஏற்றுக் கொள்கிறது என மியாட் மருத்துவமனை கூறியிருந்தது.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் விஜயகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்த போதிலும் அவரது உடல் நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரலுக்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதனால் அவர் 14 நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், ரசிகர்களும் தொண்டர்களும் வேதனை அடைந்துள்ளனர். அவர்கள் பல்வேறு கோயில்களில் கேப்டன் உடல்நலம் பெற வேண்டும் என்பதற்காக பிரார்த்தனைகளை செய்கிறார்கள். அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக சிலரும் டிரக்கியாஸ்டமி சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஜயகாந்த் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “விஜயகாந்த் வெகு விரைவில் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம், பரப்பவும் வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?