Morphing செய்யப்பட்ட போட்டோ.. டார்ச்சர் செய்த நபருக்கு சீரியல் நடிகை கொடுத்த பதிலடி..!

Author: Vignesh
4 December 2023, 4:52 pm

பிரபல நடிகையாக மலையாள சினிமாவில் வலம் வந்தவர் நடிகை பிரவீனா. ராஜா ராணி, பிரியமானவள் போன்ற சீரியல்களில் நடித்து தமிழ் மக்களின் கவனத்தை கவந்தார். மேலும் இவர் வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் கோமாளி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

praveena-updatenews360-2

சமீபத்தில் நடிகை பிரவீனா, தனது புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுகிறார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதைதொடர்ந்து களத்தில் இறங்கிய காவல் துறையினர், பாக்யராஜ் (23 வயது) என்ற மாணவரை கைது செய்தனர். பின் அவர் சில மாதங்களில் ஜாமீனில் விடுவிக்கப் பட்டார்.

praveena-updatenews360

இந்நிலையில் பிரவீனா இதுகுறித்து தெரிவிக்கையில், ” நான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் மூலம் சிலர் பழிவாங்கும் நோக்கத்தில் என்னுடைய மகள் மற்றும் நண்பர்கள் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இது குறித்து என் மகளும் தற்போது சைபர் க்ரைமில் புகார் கொடுத்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.

Praveena - updatenews360

சிறையில் இருந்து வெளியே வந்துள்ள பாக்யராஜ் என்பவர் தான் தன்னை பழிவாங்கும் நோக்கத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அந்த நபரை கடுமையாக தண்டிக்க வேண்டும் எனவும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மீண்டும் பாக்யராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணையும் நடத்தினர்.

முன்னதாக துணிச்சலாக நடந்து கொண்ட பிரவீனாவிற்கு பலர் பாராட்டினை தெரிவித்துள்ளனர். இதுபோல் சமீபகாலமாக AI தொழில்நுட்பம் மூலம் நடிகைகளின் முகத்தை வைத்து டீப் ஃபேக் வீடியோக்கள் லீக்காவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!