தத்தளிக்கும் சென்னை.. விரைந்தது ராணுவம் : வெள்ளத்தில் தவித்த மக்கள் பத்திரமாக மீட்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 December 2023, 4:50 pm

தத்தளிக்கும் சென்னை.. விரைந்தது ராணுவம் : வெள்ளத்தில் தவித்த மக்கள் பத்திரமாக மீட்பு!!!

வங்க கடலில் நகர்ந்து வரும் மிக்ஜாம் புயல் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெருமழை கொட்டித் தீர்த்தது. சில மணிநேரங்களிலேயே 20 முதல் 30 செ.மீ. மழை வரை கொட்டியது.

இதனால் ஏரிகள் பலவும் நிரம்பி குடியிருப்புகளை நோக்கி உபரி நீர் பெரும் வெள்ளமாக பாய்ந்தோடுகிறது. சென்னை புறநகரின் பெரும்பாலான பகுதிகளில் ஆறுகளைப் போல சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இந்த வெள்ளத்தில் வாகனங்கள் அதிவேகமாக அடித்துச் செல்லப்படுகின்றன.

இதனையடுத்து மழை வெள்ளம் மீட்பு நிவாரணப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படை களமிறங்கி இருக்கிறது. சில இடங்களில் ராணுவத்தினரும் களமிறங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மணப்பாக்கம், முகலிவாக்கம் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்பகுதிகளில் தத்தளித்த பொதுமக்களை ராணுவத்தினர் படகுகளில் சென்று மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

  • goundamani does not eat in home said by bayilvan கவுண்டமணியிடம் இருந்த மர்மம்? அந்த சாப்பாட்டுல என்ன இருக்கு? பின்னணியை உடைத்த பிரபலம்…