குடியிருப்புகளுக்கு மத்தியில் கிடந்த மனித எலும்புக் கூடுகள்… பதற்றத்தில் மக்கள் ; கோவையில் பரபரப்பு சம்பவம்…!!

Author: Babu Lakshmanan
5 December 2023, 4:32 pm

கோவை ; கோவை ராமநாதபுரம் பகுதியில் பிளாஸ்டிக் பையில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராமநாதபுரத்தை அடுத்த சுங்கம் பகுதியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே பிளாஸ்டிக் பையில் மனித எலும்புகள் சாலையோரம் கிடந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் , அங்கு மனித மண்டை ஓடு, எலும்புக்கூடுகள் இருப்பதை உறுதி செய்தனர்.

இந்த எலும்புக்கூடுகள் மருத்துவ மாணவர்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துள்ளனரா? அல்லது கொலை சம்பவம் ஏதேனும் நடைபெற்றுள்ளதா? என்ற கோணத்தில் எலும்புக்கூடுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • vijay famous dialogue what bro spoke by ajith in good bad ugly movie “வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?