இரட்டை குழந்தைகளுடன் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா – காப்பாற்ற யாரும் வராததால் தவிப்பு!
Author: Rajesh5 December 2023, 8:39 pm
கவர்ச்சி நடிகையான நமீதா தமிழ் ,தெலுங்கு , கன்னடம் ,ஹிந்தி மொழிப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் “எங்கள் அண்ணா” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தமிழில் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடிக்க தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரத்துடங்கினார்.
ஆம், நடிகை நமீதாவுக்கு தமிழ்நாட்டில் ரசிகர் ஒருவர் கோவிலே கட்டி உள்ளார். தமிழில் டாப் நடிகையாக இருந்த நமீதாவுக்கு படங்களுக்கு படம் உடல் எடை கூடிக்கொண்டே போக . மெல்ல மெல்ல மார்க்கெட்டை இழந்தார். இதனால் இடையில் கொஞ்ச காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்ட நடிகை நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் Re -Entry கொடுத்தார். அதே ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான வீரேந்திர சவுத்திரியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
திருமணத்துக்குப் பிறகு முக்கியமான கதாபாத்திரங்கள் கொண்ட படத்தை மட்டுமே அவர் தேர்வு செய்து நடித்து வந்தார். ஜீ தமிழிலில் ஒளிபரப்பாகி வரும் ‘புதுப்புது அர்த்தங்கள்’ சீரியலில் நடிகை நமீதா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் புதிதாக “நமிதா தியேட்டர்ஸ்” என்ற ஓடிடி தளம் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் இடைவிடாமல் பெய்து வரும் மழையால் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உடைந்து நடிகை நமீதா வீட்டுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதையடுத்து அவர் தனது இரட்டை குழந்தைகளுடன் தத்தளித்து வருகிறாராம். இதுவரை மீட்பு குழுவினர் யாரும் அங்கு செல்லாததால் நடிகை நமீதா மிகுந்த அச்சத்தில் இருப்பதாக செய்திகள் கூறுகிறது.