விஜய் டிவி ஹிரோயினை கரம்பிடிக்கும் சன் டிவி ஹீரோ.. காதலுக்கு பச்சை கொடி காட்டிய குடும்பம்..!

Author: Vignesh
8 December 2023, 2:00 pm

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகள் என்றால் சன் டிவி மற்றும் விஜய் டிவி தான் சொல்வார்கள். இவை ரெண்டும் தான் டிஆர்பி சண்டையிலும் அதிகம் வரும். இரண்டு தொலைக்காட்சியிலும் சீரியலுக்கு பஞ்சமே இல்லை. கொஞ்சம் டிஆர்பி குறைவது போல் தெரிந்தால் உடனே அந்த தொடரை முடித்து புதிய தொடரை அறிமுகம் செய்து விடுவார்கள்.

suntv vijay tv

அந்த வகையில், தற்போது இந்த இரண்டு டிவி சீரியல் நடிகர்களில் ஒரு புதிய காதல் ஜோடி உருவாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியின் கண்ணே கலைமானே என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பார்வை தெரியாதவராக நடித்து வந்த நடிகை பவித்ரா. இவர் சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சிங்கப்பெண்ணே தொடரில் அன்பு கதாபாத்திரத்தில் நடிக்கும் அஸ்மல்ஜித் என்பவரை தான் காதலிக்கிறாராம். இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டார் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!