பால் விலையை அதிகரித்து மக்கள் தலையில் கட்டி கொள்ளையடிக்கும் ஆவின் : அன்புமணி ராமதாஸ் பரபரப்பு புகார்!!!

Author: Udayachandran RadhaKrishnan
8 December 2023, 11:52 am

பால் விலையை அதிகரித்து மக்கள் தலையில் கட்டி கொள்ளையடிக்கும் ஆவின் : அன்புமணி ராமதாஸ் பரபரப்பு புகார்!!!

அன்றாட தேவையான பாலை வாங்குவதற்கு மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் வாங்குகின்றனர். பல இடங்களில் பாலை அதிக விலைக்கு விற்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதற்கு அன்புமணி ராமதாஸ் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘இயற்கை பேரிடரைப் பயன்படுத்திக் கொண்டு, குறைந்த கொழுப்பு பாலை அதிக விலைக்கு மக்கள் தலையில் கட்டி, கொள்ளையடிக்கும் ஆவின்!

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக பாலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னையில் இயல்பு நிலை திரும்பிய பகுதிகளில் கூட ஆவின் பாலோ, தனியார் பாலோ கிடைக்கவில்லை. அதனால் சென்னை மாநகர மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

பேரிடர் காலங்களில் மக்கள் மீது அக்கறையும், கருணையும் காட்ட வேண்டிய பொதுத்துறை நிறுவனமான ஆவின், எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்பதற்கிணங்க, மக்கள் வாழவே வழியில்லாமல் தவிக்கும் போது, அவர்களிடம் அதிக லாபத்தை சுரண்ட நினைப்பது தவறு. ஆவின் நிறுவனம் அது செய்த தவறையும், அதன் பொறுப்பையும் உணர்ந்து கொண்டு, டிலைட் பாலை திணிப்பதை விடுத்து, நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு உறை பால்களை வழக்கமான அளவில் சந்தையில் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.

  • Ethirneechal Serial Fans are shocked and stop to watch என்ன கொடுமை இது ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதையே நிறுத்திட்டேன்!
  • Close menu