மீண்டும் சமந்தாவுடன் இணைய விருப்பம்? வெளிப்படையாக பேசிய நாக சைதன்யா..!
Author: Vignesh8 December 2023, 2:45 pm
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக உச்சம் தொட்டவர் நடிகர் நாக சைதன்யா. நடிகை சமந்தாவை 2017 காதலித்து திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் சில பல கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ல் விவாகரத்தை அறிவித்தனர்.
தற்போது, இவர்கள் இருவரும் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது வரை விவாகரத்துக்கு காரணம் கூறாமலும், வதந்திகளுக்கு கருத்துக்கள் கூறாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக செய்திகள் இணையதளத்தில் பரவியது.
அந்த வதந்திகளுக்கும், எந்தவித கருத்தும் கூறாமல் இருவரும் பிசியாக படங்களில் கவனம் செலுத்தி வந்தனர். தனிப்பட்ட வாழ்க்கையில், மக்கள் மத்தியில் அதிகம் கவனம் பெற்றவர்கள் இந்த ஜோடிகள். அந்த வகையில், தனிப்பட்ட வாழ்க்கையில் மீடியாக்கள் அதிகம் கவனம் செலுத்துவதாகவும், அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய உண்மை அவருக்கு நெருக்கமானவர்களுக்கு நன்றாக தெரியும் என்று நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களும் மீடியாக்களும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கவனம் செலுத்தி வருவதை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், படத்தை பார்த்தும் அவரது வேலையை பார்த்தும் தான் அங்கீகரிக்க வேண்டும், தவிர தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து யாரும் ஜட்ஜ் செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.