வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கிரஷர் மற்றும் குவாரி சங்கம் : ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2023, 5:14 pm

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கிரஷர் மற்றும் குவாரி சங்கம் : ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைப்பு!

வரலாறு காணாத மழை சென்னை மாநகரத்தையும் புறநகர் பகுதிகளையும் புரட்டிப்போட்டு விட்டது. குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மின்சாரம் மொத்தமாக தடைபட்டது. உணவுக்காகவும் குடிநீருக்காகவும் மக்கள் தவித்து போய் விட்டனர். ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களின் உடமைகள் மொத்தமாக வெள்ளநீரில் போய் விட்டது. அனைவரும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள், பிரபலங்கள் என பலர் அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து வருகின்றனர்.

இது தவிர, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள், அரசு அதிகாரிகள் சார்பாக பொருட்களை சென்னைக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையல் கிரஷர் மற்றும் குவாரி சங்கத் தலைவர் திரு. k. சந்திரபிரகாஷ், செயலாளர் நந்தகுமார் மற்றும் பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் ஒருங்கிணைந்து சங்க உறுப்பினர்கள் மூலம் நிதி திரட்டி சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்களை கோவை மாநகராட்சியிடம் வழங்கினார்.

இதற்கு ஆதரவு மற்றும் நிதியளித்த அனைத்து சங்க உறுப்பினர்களுக்கும் கிரஷர் மற்றும் குவாரி சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.

  • sundar c openly talks about nayanthara in mookuthi amman sets நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!