அவளுக்கு தம் அடிக்கிற பழக்கம் இருக்கு?.. அர்ச்சனாவை மோசமாக விமர்சிக்கும் வனிதா..!
Author: Vignesh9 December 2023, 6:31 pm
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.
இந்தநிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய திருப்பத்தை உருவாக்குவதற்காக 5 வைல்கார்டு போட்டியாளர்கள் உள் நுழைந்தார்கள். அதில், வந்தவர்களில் நடிகை அர்ச்சனா வந்த முதல் வாரம் முதல் அழுது புலம்பி கொண்டு இருந்தாலும், இரண்டாம் வாரத்தில் இருந்து விளையாட ஆரம்பித்துவிட்டார்.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக நிக்ஸன் அர்ச்சனா இருவருக்கும் இடையே சண்டை வெடித்தது. மேலும், அர்ச்சனா அதிகமாக புகைப் பிடிக்கிறார் என்று இது தொடர்பில், கமலிடம் கூற போவதாகவும் விஷ்ணு கூறியிருக்கிறார்.
இதனால், அர்ச்சனாவின் ஆரோக்கியத்திற்கு குறைபாடு ஏற்படும் எனவும் கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து, பிக் பாஸ் விமர்சகர் வனிதா, அர்ச்சனா பற்றி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதாவது, அர்ச்சனாவிற்கு புகை பிடிப்பது போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கங்கள் இருக்கிறது என்றும் காரணமாகத்தான் அவர் காபி விஷயத்தில் அப்படி ரியாக்ஷன் கொடுக்கிறார்.
மேலும், எங்களுடைய சீசனிலும் இப்படியான போட்டியாளர்களை பார்த்திருக்கிறோம். அதற்கான விஷயம் சரியாக கிடைக்காவிட்டால், இப்படித்தான் நடந்து கொள்வார்கள் எனவும் பேசியுள்ளார். வனிதா அர்ச்சனா குறித்து பேசியது வைரலான நிலையில், இதனை பார்த்த நெட்டிசன்கள் உன்வீட்டு, பொண்ணா இருந்தா இந்த மாதிரி கீழ்த்தரமா பேசுவியா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.