இப்போ பீல் பண்ணி என்ன பண்றது.. ஷங்கரின் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த டாப் ஹீரோ..!
Author: Vignesh10 December 2023, 5:00 pm
இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் படத்திற்கு படம் பிரம்மாண்டத்தை கொடுத்து வசூல் சாதனை செய்து வருகிறார். இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு இயக்குனராகவும் சங்கர் இருக்கிறார்.
முன்னதாக, சங்கர் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த ஜீன்ஸ் திரைப்படம் 25 வருடங்கள் கழித்தும் தற்போதும், அந்த படம் ரசிகர்கள் ரசிக்கும் ஒன்றாக இருந்து வருகிறது. பெரிய செலவு செய்து எடுக்கப்பட்ட பாடல் ஏ ஆர் ரகுமானின் மியூசிக் கிராபிக்ஸ் காட்சிகள் என இந்த படத்தில் பல விஷயங்கள் ரசிகர்களை ரசிகர்கள் தற்போது பிரம்மிப்பாக பேசுகின்றனர்.
ஜீன்ஸ் படத்தில், பிரஷாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் என்றாலும், ஐஸ்வர்யா ராய் ஒருவர் தான் என்றாலும், கதைப்படி அவர் இரட்டை வேடத்தில் நடிப்பார். ஜீன்ஸ் படத்தில், முதலில் நடிகர் அப்பாஸை தான் ஷங்கர் அணுகி உள்ளார். ஆனால், அவர் கொடுக்காததால் அடுத்ததாக அஜித்தை நடிக்க வைக்கலாம் என சங்கர் திட்டமிட்டு அஜித்துக்கும் கால்ஷீட் பிரச்சினை என்பதால், அடுத்து தான் பிரசாத்தை சங்கர் அணுகி இருக்கிறார். அவரை வைத்து எடுத்த ஜீன்ஸ் பெரிய ஹிட் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.