இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.
ஆம், இவர்கள் இவரும் சேர்ந்து 2018ம் ஆண்டில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ராஷ்மிகாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய துவங்கியது. தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து இந்தி திரைப்படத்திலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.
கடைசியாக ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தார். கியூட்டான நடிகையாக ரசிகர்கள் மனதை இடம் பிடித்த ராஷ்மிகா நேஷ்னல் கிரஷ் என்ற பட்டத்தையும் பெற்றார். இந்நிலையில் தற்போது நேஷ்னல் க்ரஷ் டைட்டில் நடிகை Tripti Dimriக்கு சென்றிருக்கிறது. அவர் அனிமல் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். மேலும் ரன்பீர் கபூருடன் நடித்த நெருக்கமான காட்சிகளும் வைரலானது. வெறும் 6 லட்சம் பாலோவர்ஸ்களை கொண்டிருந்த இவர் தற்போது 3.1 மில்லியன் ரசிகர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.