வேண்டாம் என்றாலும் விலகுவதாய் இல்லை.. கிங் மேக்கரே : காமராஜர் முகத்துடன் ரஜினியின் முகம் : ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
11 December 2023, 8:23 am

வேண்டாம் என்றாலும் விலகுவதாய் இல்லை.. கிங் மேக்கரே : காமராஜர் முகத்துடன் ரஜினியின் முகம் : ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

நடிகர் ரஜினி தனது 74-வது பிறந்த நாள் நாளை மறுநாள் கொண்டாட இருக்கிறார்,எந்த வயதிலும் பாக்ஸ் ஆபீஸ் சாதனை செய்ய முடியும் என ஜெயிலர் படத்தின் மூலம் நிரூபித்துள்ள ரஜினிகாந்த் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்த படத்தின் அப்டேட் நாளை மறுநாள் வெளியாக வாய்ப்புள்ளது.
அரசியளில் களம் இறங்குவதாக அறிவித்த ரஜினிஅந்த முடிவை கைவிட்டு தற்போது வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்.

அரசியலில் இருந்து பின் வாங்கிய ரஜினியின் செயல் ரசிகர்களுடைய கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது இருப்பினும் அவரது படம் பிறந்தநாள் வரும்போதெல்லாம் அரசியல் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டி வருவது வழக்கம் , இந்நிலையில் மதுரையில் காமராஜர் உடன் ரஜினியை ஒப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர் அந்த போஸ்டரில்,

“வேண்டாம் என்றாலும் விலகுவதாய் இல்லை..வருங்காலத்தை உருவாக்க காத்திருக்கிறோம்.. “கிங் மேக்கரே !!!” வணங்குகிறோம்.. என்கிற வாக்கியங்களுடன் முன்னாள் முதல்வர் காமராஜர் முகத்துடன் ரஜினி முகத்தை சேர்த்து வித்தியா போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.

  • goundamani does not eat in home said by bayilvan கவுண்டமணியிடம் இருந்த மர்மம்? அந்த சாப்பாட்டுல என்ன இருக்கு? பின்னணியை உடைத்த பிரபலம்…