73-வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ரஜினி.. சமூகவலைதளங்களில் அலப்பறை கிளப்பும் ரசிகர்கள்…!

Author: Vignesh
12 December 2023, 9:45 am

கர்நாடக மாநிலத்தில் பிறந்து, வளர்ந்து தமிழக மக்களின் மனங்களில் நிரந்தர இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் கடந்து வந்த பாதை மிக கடினமானது. திரைத்துறையில் ஜெயிக்க வேண்டும் என்றால் பளபளப்புடன் கூடிய தேஜசான உடல் தோற்றத்தோடு, வெள்ளையாக இருக்க வேண்டும் என்கிற ஃபார்முலாவையே மாற்றியவர் என்றால் அது ரஜினிகாந்த் தான். இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் வாழ்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த வயதிலும் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சினிமாவில் டப் கொடுத்து வருகிறார். வசூல் நாயகனாகவும், ரஜினிகாந்த் டாப்பில் இருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் கூட இந்த குதிரை அப்போதே நின்றுவிடும் இப்போது நன்றியுடன் என நினைத்தார்கள் ஆனால், 40 வருடத்தை தாண்டி ஓடிக்கொண்டிருப்பதை பார்த்து பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

ரசிகர்களின் வாழ்த்தும் கடவுளின் அருளும் என்னை ஓட வைத்துக் கொண்டிருக்கிறது என ரஜினிகாந்த் சந்தோஷமாக கூறி வருகிறார். இந்நிலையில், டிசம்பர் 12ம் தேதி அன்று ரஜினியின் பிறந்த நாளை ஒட்டி 73 வது பிறந்த நாளை ஒட்டி அவரது மனைவி, மகள்கள், பேரன்கள் என அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

Rajinikanth

அந்த வகையில், இந்தாண்டும் ரஜினிகாந்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் நள்ளிரவில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் தலைமையில் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார்கள். மேலும் முன்னணி சமூகவலைதளங்களான பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராமில் Thalaivar 170, SuperStar Rajinikanth, HBD SuperStar Rajinikanth போன்ற ஹாஷ்டேக்களை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!