இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை ; இன்றும் அதிரடியாக குறைந்து விற்பனை..!!

Author: Babu Lakshmanan
12 December 2023, 11:23 am

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை ; இன்றும் அதிரடியாக குறைந்து விற்பனை..!!

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்திலிருந்து சுமார் ரூ.2,500 வரை உயர்ந்து காணப்பட்டது.

கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை, நேற்று ஒரே நாளில் ரூ.120 குறைந்து மகிழ்ச்சி கொடுத்துள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவாறு இன்றும் அதிரடியாக விலை குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,720க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 குறைந்து ரூ.4,686க்கும், சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.37,488க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.77,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?