2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.
இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.
கடைசியாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். நடிகை தமன்னா பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை கடந்த சில வருடங்களாகவே காதலித்து வருகிறார். அவர்களின் அவுட்டிங், ரகசிய லிப்லாக் உள்ளிட்ட புகைப்படங்கள் வெளியாகி அதை உறுதி செய்ய பின்னர் இருவரும் காதலிப்பதாக ஒப்புக்கொண்டனர்.இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில் சமீபத்திய பேஷியன் நிகழ்ச்சி ஒன்றில் தனது காதலன் விஜய் வர்மாவுடன் பங்கேற்ற நடிகை தமன்னா, கவர்ச்சியாக சேலை கட்டி உடலை ஹாட் அழகாக காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார். போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும் போதே சேலை நழுவி கிளாமர் கொஞ்சம் தூக்கலாக தெரிய ரசிகர்கள் கிறங்கிப்போய்விட்டனர்.