என்னக்கு மாப்பிள்ளை இப்படித்தான் வேண்டும்… அளவான ஆசையை கூறிய சாய்பல்லவி!

Author: Rajesh
12 December 2023, 2:49 pm

நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என தன் ஆசையை வெளிப்படையாக கூறியுள்ளார். அதன்படி, எனக்கு கருப்பாக இருக்கும் ஆண்களை தான் மிகவும் பிடிக்கும். அத்துடன் அவர் எமோஷ்னலாகவும், சென்சிட்டிவாகவும் இருக்கவேண்டும்.

ஆண்கள் என்றால் அழக்கூடாது என்பது இல்லை. எமோஷ்னலாக அழகுற பையனை எனக்கு மிகவும் பிடிக்கும். அத்துடன் எனக்கு சமைக்க தெரியாது. சமைக்க தெரிந்த பையனாக இன்னும் சந்தோசம் என கூறினார். இதை கேட்டதும் ஒரு ஹீரோயினாக இருக்கும் சாய்ப்பல்லவி இவ்வளவு சிம்பிளான ஆசை கொண்டிருக்கிறாரா? என ஆச்சர்யத்துடன் கேட்டுள்ளனர்.

  • Actor Manikandan latest news ‘குட் நைட்’ படத்தில் மணிகண்டனுக்கு அடித்த லக்…பிரபல நடிகரின் தாராள மனசு.!