அந்த விஷயத்திற்கு தொடர்ந்து நச்சரித்த காதலன்.. No சொல்லியும் விடல.. PS சீரியல் நடிகை எடுத்த முடிவு..!
Author: Vignesh12 December 2023, 6:44 pm
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஓடியது. இதில் சுஜிதா, குமரன், ஸ்டாலின், வெங்கட் போன்ற பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சீரியலில் முல்லை எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை லாவண்யா இதற்கு முன்னதாக, சிற்பிக்குள் முத்து எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து உள்ளார்.
இந்நிலையில், தற்போது ரேசர் எனும் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார். சமீபத்தில், பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட லாவண்யா நான் பெற்றோர்களுக்கு தெரியாமல் மாடலிங் செய்து விளம்பரம் நடிக்க ஆரம்பித்தேன், விஷயம் தெரிந்ததும் பெற்றோர்கள் சண்டை போட்டார்கள்.
ஆனால், கடைசியில் எனக்கு சம்மதம் சொன்னார்கள். வங்கியில் பணிபுரிந்த போது நான் செய்த எல்லா விஷயத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்த எனது காதலன் மாடலிங் துறைக்கு வந்ததும் நான் செய்தது தவறு என சொல்லி டார்ச்சர் செய்தார். இது எனது கனவு என் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு போகக்கூடிய வாய்ப்பு இது என நான் நினைத்தேன். அதை விட சொன்னதால் நான் எனது காதலனை பிரேக்கப் செய்தேன் என வெளிப்படையாக லாவண்யா தெரிவித்துள்ளார்.