தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… தொடர்ந்து சரியும் தங்கம் விலை ; இன்று எவ்வளவு குறைவு தெரியுமா..?
Author: Babu Lakshmanan13 December 2023, 11:00 am
தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… தொடர்ந்து சரியும் தங்கம் விலை ; இன்று எவ்வளவு குறைவு தெரியுமா..?
இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை, நேற்று ஒரே நாளில் ரூ.240 குறைந்து மகிழ்ச்சி கொடுத்துள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவாறு இன்றும் அதிரடியாக விலை குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,700க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ரூ.4,669க்கும், சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.37,352க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.77.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
.