ரெண்டு தாலி போட்டுக்கொண்ட சங்கீதா.. வெளியான ரெடின் கிங்ஸ்லியின் திருமண ரகசியம்..!(வீடியோ)

Author: Vignesh
13 December 2023, 1:45 pm

தமிழ் சினிமாவில் காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி சில தினங்களுக்கு முன் சீரியல் நடிகையும் மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக நடித்த சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். மைசூரில் இவர்களது திருமணம் சாதாரணமாக நடைபெற்றது.

redin kingsley

திருமணமாகி ஒரே வாரத்தில் மனைவி சங்கீதா உடன் ஹனிமூன் டூர் சென்று இருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்து வைரலாகி வருகிறது.

redin kingsley

இந்நிலையில், சங்கீதாவுக்கு மேக்கப் போட்டு வந்த பெண் அளித்த பேட்டி ஒன்றில், இருவரும் பிளான் செய்து திருமணத்தை செய்யவில்லை. ரெடின் கிங்ஸ்லி சாருக்கு மைசூரில் சூட்டிங் நடந்தது. அந்த இடைவெளியில் நடந்த பிளான் இது, அதுவும் திருமணத்தின் போது தான் சார் வந்ததை பார்த்தோம்.

redin kingsley

திருமணம் முடிந்த போது தான் நாங்கள் சென்றோம். இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. சங்கீதாவின் தாலியில் இரு டாலர் இருந்தது. ரெடின் கிங்ஸ்லி கிறிஸ்டியன் என்பதால் அந்த டாலரும், சங்கீதா இந்து என்பதால் அந்த தாலியும் இருந்தது. திருமணம் முடிந்தவுடன் ஹிந்து கோவிலுக்கு சென்று பின் சர்ச்சுக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!