ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி… உருக்கமான வீடியோ வெளியிட்ட திரிஷா!

Author: Rajesh
14 December 2023, 9:48 am

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

trisha - updatenews360 1

தற்போது 40 வயதாகும் த்ரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர். ஆனால் திரிஷாவோ சிம்பு மற்றும் ராணாவை காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார்.

இதனிடையே வீட்டில் பார்த்த மாப்பிள்ளை வருண் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று பின்னர் நின்றுபோனது. இதனால் திருமண வாழ்க்கையே இப்போதைக்கு வேண்டாம் என ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

பல வருடங்களுக்கு பின்னர் 96 திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதைடுத்து வாய்ப்புகள் குவியத்துவங்க தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கடைசியாக விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்து லிப்லாக் காட்சிகளில் நடித்து அவருடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். இந்நிலையில் திரிஷா கதாநாயகியாக அறிமுகம் ஆகி 21 ஆண்டுகள் ஆனதை நன்றி கூறி பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

  • Sai Abhyankar viral songs ஹாட்ரிக் வெற்றியில் சாய் அபியங்கர்…ரசிகர்களை சுண்டி இழுத்த “சித்திர புத்திரி” பாடல்..!