காசு பணம் துட்டு Money Money… மனைவியுடன் ஜல்ஸா நடனமாடிய கிங்ஸ்லி (வீடியோ)

Author: Rajesh
14 December 2023, 10:38 am

தமிழ் சினிமாவில் மிகக்குறுகிய காலத்திலேயே பரவலான மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான காமெடியனாக பார்க்கப்படுபவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ‘டாக்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். வசன உச்சரிப்பு வித்தியாசமான உடல் மொழி என தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி விஜய் நடிப்பில் உருவாகிய ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அத்துடன், சமீபத்தில் வந்த ஜெய்லர் படத்திலும் நடித்திருப்பார். இவர் படங்களில் காமெடியனாக நடித்தாலும், இவர் நிஜத்தில் ஒரு கோடீஸ்வரர். ஆம், ரெடின் கிங்ஸ்லி பார்க்கத்தான் ஒரு காமெடி பீஸ் ஆனால், உண்மையில் அவர் பெரிய மூளைக்காரர். இவர் தமிழ்நாடு முழுக்க கண்காட்சி நடத்தும் தொழில் செய்து வருகிறார். அதன் மூலம் அவர் அதிக அளவு சம்பாதித்தும் வருகிறார்.

redin kingsley

கடந்த இரண்டு நாட்களாக ரெடின் கிங்ஸ்லி பற்றிய செய்தி தான் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது. ஆம். இவர் மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக நடித்த நடிகை சங்கீதாவை நேற்று முன்தினம் இவர் திருமணம் செய்துக்கொண்டார். அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவியது. 46 வயது காமெடி நடிகருக்கு இவ்வளவு அழகான மனைவியா? என பலரும் ஆச்சரியப்பட்டனர்.

redin kingsley

சில ஆண்டுகளுக்கு முன்பே நடிகை சங்கீதாவும், ரெடின் கிங்ஸ்லியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும், எத்தனை நாள் திருமணத்தை தள்ளிப்போடுவீர்கள் என சங்கீதா கேட்டதால்தான் ரெடின் கிங்ஸ்லி ஒப்புக்கொண்டதாகவும், இந்த திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

redin kingsley

அதையடுத்து இந்த புதுமண ஜோடி தங்களின் தேனிலவு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரது பார்வையும் ஈர்த்துள்ளனர். ஆம் சங்கீதா முட்டி தெரிய குட்டையான கவர்ச்சி ஆடையணிந்து கிங்ஸ்லியுடன் நெருக்கமாக இருக்கும் இந்த புகைப்படங்கள் பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இந்நிலையில் கிங்ஸ்லி மனைவி சங்கீதாவுடன் ஜாலியாக ரொமான்டிக் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வழக்கம் போல் வைரலாகியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்ஸ் காசு, பணத்தால் சேர்ந்தது தான் இந்த ஜோடி என கூறி விமர்சனம் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ:

https://www.youtube.com/shorts/6SFkPQehV7k
  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 551

    0

    0