ரஜினியை காண வந்த ரசிகர்களுக்கு நேர்ந்த விபரீதம்… பிறந்தநாளன்று நடந்த துயரம்!
Author: Vignesh14 December 2023, 2:50 pm
கர்நாடக மாநிலத்தில் பிறந்து, வளர்ந்து தமிழக மக்களின் மனங்களில் நிரந்தர இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் கடந்து வந்த பாதை மிக கடினமானது. திரைத்துறையில் ஜெயிக்க வேண்டும் என்றால் பளபளப்புடன் கூடிய தேஜசான உடல் தோற்றத்தோடு, வெள்ளையாக இருக்க வேண்டும் என்கிற ஃபார்முலாவையே மாற்றியவர் என்றால் அது ரஜினிகாந்த் தான். நேற்று அவர் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்த வயதிலும் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சினிமாவில் டப் கொடுத்து வருகிறார். வசூல் நாயகனாகவும், ரஜினிகாந்த் டாப்பில் இருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் கூட இந்த குதிரை அப்போதே நின்றுவிடும் இப்போது நன்றியுடன் என நினைத்தார்கள் ஆனால், 40 வருடத்தை தாண்டி ஓடிக்கொண்டிருப்பதை பார்த்து பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
ரசிகர்களின் வாழ்த்தும் கடவுளின் அருளும் என்னை ஓட வைத்துக் கொண்டிருக்கிறது என ரஜினிகாந்த் சந்தோஷமாக கூறி வருகிறார். இந்நிலையில், டிசம்பர் 12ம் தேதி நேற்று ரஜினியின் பிறந்த நாளை ஒட்டி 73 வது பிறந்த நாளை ஒட்டி அவரது மனைவி, மகள்கள், பேரன்கள் என அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலானது.
இந்நிலையில், பத்திரிகையாளர் செய்யாறு பாலு, ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று நடந்த மோசமான சம்பவம் குறித்து பேசி உள்ளார். அதில் அவர் பேசுகையில், 80 s காலகட்டத்தில் தனது பிறந்த நாள் விழாக்களில் ரஜினி ரசிகர்களை சந்தித்து வந்தார். ஆனால், தற்போது அப்படி செய்வதில்லை. அதற்கு காரணம் தனது பிறந்தநாளில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். அவரை சந்தித்து விட்டு சென்ற மூன்று ரசிகர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்கள். அவர்களின் தாயார் கேட்ட கேள்விகள் இன்னும் தன் காதில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. இந்த காரணத்தினால் தான் நான் பிறந்த நாளில் ரசிகர்களை சந்திப்பதிலை என்று ரஜினி ஒரு நிகழ்ச்சியில் கூறியதாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.