சாலையோர வியாபாரிகளை மிரட்டும் விடுதலை சிறுத்தை கட்சியினர்… கோட்டாட்சியரிடம் பழனி அடிவாரம் பகுதி வியாபாரிகள் புகார்!!

Author: Babu Lakshmanan
14 December 2023, 3:51 pm

பழனி அடிவாரம் பகுதியில் சாலையோர வியாபாரிகளை விடுதலை சிறுத்தை கட்சியினர் மிரட்டி வருவதாக வியாபாரிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்

பழனி அடிவாரம் பகுதியில் தற்போது ஐப்பசி மாசம் மற்றும் தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக ஏராளமான வியாபாரிகள் கடையில் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அடிவாரம் பகுதி சாலையோர வியாபாரிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டு வருவதாகவும், அடிவாரம் பகுதியில் தொடர்ந்து வியாபாரம் செய்ய கூடாது என கொலை மிரட்டல் விடுத்தும் மிரட்டி வருகின்றனர்.

எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அடிவாரம் வியாபாரிகள் பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும், பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் தாக்கியதாக சிலர் பொய்யான பரப்பரை செய்து வருவதாகவும், அவர் யாரையும் தாக்கவில்லை எனவும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் தெரிவித்தனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!