பெண் தோழியுடன் பேச வந்த ஆண் நண்பர்கள்… அட்வைஸ் செய்த பெட்ரோல் பங்க் பணியாளர்… திடீரென கைகலப்பு… வைரலாகும் சிசிடிவி காட்சி!!
Author: Babu Lakshmanan14 December 2023, 5:00 pm
பெட்ரோல் பங்கில் பணி செய்யும் பெண் தோழியுடன் பேச வந்த நண்பர்களுக்கும் சக பணியாளர்களுக்கும் இதே ஏற்பட்ட வாக்குவாதம் கை கலப்பில் முடிந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டிணம் இசிஆர் சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் பணி செய்யும் பெண் பணியாளர் உடன் அதே பகுதி சேர்ந்த அவரது ஆண் நண்பர்கள் வெகுநேரமாக பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, சகப்பனியாளர்கள் இங்கே சிசிடி கேமராக்கள் உள்ளது. இங்கே பெண் பணியாளர் உடன் பேசக்கூடாது. பேசுவதாக இருந்தால் தள்ளி போய் பேசுங்கள், பங்கின் உரிமையாளர் பார்த்தால் எங்களை தான் திட்டுவார் என கூறியதற்கு, பெண் பணியாளரின் நண்பர்களுக்கும், பெட்ரோல் பங்கில் பணி செய்யும் சக பணியாளர் தனுசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றும் நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனைக் கண்ட பெட்ரோல் பங்க் பணி செய்யும் பணியாளர் கல்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் கைகலப்பில் ஈடுபட்டவர்களை கைது செய்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது சம்பவ குறித்து சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.