‘ஏய், நான் லோக்கல்யா… சும்மா ஏதாச்சு கிளப்பி விடாதீங்கய்யா’… செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் கேஎன் நேரு நகைச்சுவை பதில்..!!

Author: Babu Lakshmanan
15 December 2023, 11:21 am

லோக்கல்ல இருக்கிற எங்களிடத்தில் நாடாளுமன்றம் குறித்து கேட்காதீர்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.

108 திவ்ய திருத்தலங்களில் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் தினந்தோறும் திருச்சி தமிழகம், மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சகணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அரங்கணை தரிசிக்க வருகின்றனர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும்.

மேலும், முறையான பேருந்து நிலையம் இல்லாததால் புதிய பேருந்து நிலையம் அமைத்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வந்தனர். கோரிக்கையை ஏற்று காந்தி ரோடு சாலையில் புதிய ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரூ. 11.10 கோடி செலவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டில் பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மண்டல தலைவர் ஆண்டாள் ராம்குமார் மற்றும் துறை அதிகாரிகள் கட்சியினர் தொழிலாளர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது :- இன்று ஒரு கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய பணிகள் நடைபெற உள்ளது. 6 மாதத்தில் பணிகள் முடிவடையும் எல்லா வசதிகளுக் கொண்ட பேருந்து நிலையமாக இருக்கும். கொள்ளிடம் ஆற்று பகுதியில் ஆறு ஏக்கர் இடத்தில் ஓம்னி பஸ் ஸ்டாண்ட் அமைய உள்ளது. இடம் அறநிலையத்துறை இடம் உள்ளது. அது கிடைத்தால் சுமார் 11 ஏக்கர் இடம் இருக்கும். ஸ்ரீரங்கத்தில் ஆம்னி பஸ் நிலையம் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் நசரத்பேட்டை தவிர மற்ற எங்கும் தண்ணீர் இல்லை. ஆவடி பகுதியில் முற்றிலுமாக சரி செய்து விட்டோம், சும்மா ஏதாச்சு கிளப்பி விடாதீங்கய்யா என நகைச்சுவையாக பதில் அளித்தார்.

தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஐந்து பேர் நீக்கப்பட்டது குறித்து கேட்ட பொழுது, ஸ்ரீரங்கத்தில் நாங்கள் லோக்கல்ல இருக்கிறோம், எங்கள் கிட்ட போய் நாடாளுமன்ற பற்றி கேட்கிறீர்களே, என்று நகைச்சுவையாக பதில் அளித்து கடந்து சென்றார்.

  • Family Man 3 Actor Rohit Basfore Found Dead Near Guwahati Waterfall நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!