அந்த 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை… வெளுத்து வாங்கப்போகும் மழை… மீனவர்களுக்கு வந்த திடீர் உத்தரவு!!

Author: Babu Lakshmanan
16 December 2023, 8:24 am

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில், தமிழகத்தில் 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

rain - Updatenews360

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட நாட்டு படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்பிடித் துறைமுகத்தில் மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

மேலும், நடுக்கடலில் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பும் படி மீன்வளத்துறை வலியுறுத்தியுள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 358

    0

    0