‘அந்த மனசுதான் சார் கடவுள்’… சென்னை மக்களுக்காக உண்டியல் பணத்தை கொடுத்த 10 வயது சிறுவன்…!!

Author: Babu Lakshmanan
16 December 2023, 10:16 am

சென்னை வெள்ள நிவாரண நிதியாக 5ம் வகுப்பு மாணவன், தன் உண்டியலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதையும், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் நிவாரணம் வழங்குவதை, கரூர் மாவட்டம் வெள்ளியணையை அடுத்த மணவாடி கிராமத்தை சார்ந்த ஹித்தேஷ் (வயது 10) என்ற 5ம் வகுப்பு மாணவன் பார்த்துள்ளார்.

தான் வேதனையடைந்த நிலையில், சிறுவனும் உதவி செய்ய வேண்டும் என பெற்றோரிடமும், ஆசிரியர்களிடமும் தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று மணவாடியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு வந்த ஆட்சியர் தங்கவேலிடம் தான் கடந்த 6 மாத காலமாக சேர்த்து வைத்திருந்த சேமிப்பு காசுகளை உண்டியலுடன் வழங்கினான்.

மணவாடி ஜோதிமணி, சரவணன் தம்பதியினரின் மகன் ஹிதேஷிற்கு ஷாலினி என்கின்ற அக்கா இருக்கிறார். உண்டியலில் சுமார் 600 ரூபாய் வரை சேமித்து வைத்திருந்ததாகவும், அதனை சென்னைக்கு நிவாரணத்திற்காக வழங்கியதாக தெரிவித்தனர் பெற்றோர்.

  • ajith kumar and sivakarthikeyan on csk vs srh match அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!