தினமும் டார்ச்சர்… காதல் கொடுமை குறித்து ஷபானா ஷாக்கிங் தகவல்!

Author: Rajesh
16 December 2023, 5:17 pm

அழகிய சீரியல் நடிகையான ஷபானா மலையாள சீரியல்களில் நடித்து பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பரத்தி சீரியலின் கதாநாயகியாக நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானார்.

செம்பருத்தி சீரியல் நிறைவடைந்ததும் சன் டிவியில் மிஸ்டர் மனைவி எனும் தொடரில் நடிக்க தொடங்கினார். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்தார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யன் என்பவரை 2021ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் ஷபானா முஸ்லீம் பெண், ஆர்யன் இந்து என்பதால் இருவரது காதலுக்கும் பெற்றோர்கள் எதிர்ப்புகள் தெரிவித்தனர். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஷபானா நான் ஆர்யனை காதலிக்க கூடாது என்பதற்காக அவரது பெற்றோர்கள் தினமும் டார்ச்சர் செய்து எதையேனும் சொல்லி மனதை மாற்ற முயற்சித்ததாக ஷபானா அந்த பேட்டியில் கூறினார்.

  • srikath shared about his first film dropped which ar rahman composed முதல் படமே ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்? ஆனா விதி வேலையை காட்டிருச்சு- புலம்பித் தள்ளிய ஸ்ரீகாந்த்