பாக்யராஜ் மருமகளுக்கு அந்த நோய் இருக்கா?.. இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட சாந்தனு..!
Author: Vignesh16 December 2023, 5:56 pm
பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் மகனும், நடிகருமான சாந்தனுவின் மனைவி கீர்த்தி புது போட்டோக்களை Upload செய்துள்ளார். இவர் சிறந்த தொகுப்பாளி மற்றும் நடனத்தில் கை தேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியும்.ஆனால் நடனத்தை பல முறை தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தியது இல்லை என்றாலும், தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் நிறைய பேசியுள்ளார்.

திருமணத்திற்கு பின்பும் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வரும் இவர் இப்போது புது முயற்சியில் இறங்கியுள்ளார். தனது டான்ஸ் திறமையை வளர்த்துக் கொண்டு பின் நடபள்ளி ஒன்றை அமைத்து அதில் Celebreties கூப்பிட்டு மாஸ் காட்டி கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சாந்தனு வெளியிட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, அந்த வீடியோவில் வீட்டுக்குள் நுழையும் சாந்தனு எடுத்த பொருட்களை எடுத்த இடத்திலேயே போட்டு விடுகிறார். எதையும் சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருக்கிறார். ஆனால், சாந்தனு கண்டபடி போடும் பொருட்களை குப்பை போடும் இடங்களை கிகி சுத்தம் செய்கிறார். அந்த வீடியோவை பகிர்ந்த சாந்தனு, என் மனைவிக்கு OCD -அதீத சுத்தத்தை எதிர்பார்ப்பவர்கள் நோயெல்லாம் இல்லை. நாங்கள் ஒரு முரண்பாடான ஜோடி அவ்வளவுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.