தமிழகத்தின் ரேவந்த் ரெட்டியா இவர்? ஒரே நாளில் ஓஹோ ஆஹோ என பேச்சு.. ஷாக்கில் சத்தியமூர்த்தி பவன்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 December 2023, 6:25 pm

தமிழகத்தின் ரேவந்த் ரெட்டியா இவர்? ஒரே நாளில் ஓஹோ ஆஹோ என பேச்சு.. ஷாக்கில் சத்தியமூர்த்தி பவன்!!

தெலுங்கானா மாநிலத்தில் அதல பாதாளத்தில் கிடந்த காங்கிரசை 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனது அயராத உழைப்பால் உயர்த்தி, ஆட்சியை கைப்பற்றி, முதல்-மந்திரியாகவும் ஆகி இருப்பவர் ரேவந்த் ரெட்டி. அவரது களப்பணியை சொந்த கட்சிக்காரர்கள் மட்டுமில்லாமல் மற்ற கட்சிக்காரர்களும் வியந்து பார்க்கிறார்கள்.

இப்போது அதே பணியில் தமிழகத்தின் அடுத்த ரேவந்த் ரெட்டி, கார்த்தி ப.சிதம்பரம் தான் என்று காலரை தூக்கி விடுவதை பார்த்து சொந்த கட்சிக்காரர்களே கலாய்க்கிறார்கள்.

கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் சிலர் சத்திய மூர்த்தி பவனில் இவ்வாறு பேசவும் அதை கேட்ட சக காங்கிரஸ்காரர்களே வடிவேல் பாணியில் ‘அய்யோ… அய்யோ… ஏம்பா… காமெடி கீமெடி பண்ணலியே’ என்றனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?