கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்ல.. பாத்ரூம் பக்கெட்டை கொடுத்து அள்ள சொல்லி இருக்காங்க : கமல்ஹாசன் வேதனை!!

Author: Udayachandran RadhaKrishnan
17 December 2023, 5:58 pm

கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்ல.. பாத்ரூம் பக்கெட்டை கொடுத்து அள்ள சொல்லி இருக்காங்க : கமல்ஹாசன் வேதனை!!

மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் உடமைகளை முற்றிலும் சீரழிந்தது. அதே நேரத்தில் எண்ணூர் மற்றும் மணலி பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீரோடு சேர்ந்து சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியான எண்ணெய் கசிவு பொதுமக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. வீடுகள், தோட்டங்கள், வாகனங்கள் என அனைத்தையும் சீரழித்து கடலில் சென்று கலந்துள்ளது.

ஙஇதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வடசென்னை திருவொற்றியூரை அடுத்த எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் தொழிற்சாலையில் இருந்து வெளிவந்த ஆயுள் கழிவுகள் முகத்துவாரம் பகுதி முழுவதும் படர்ந்து இதனால் 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் பாதிப்படைந்தனர் மீன்கள் அதிக அளவில் செத்து மிதந்தது இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது.

இதனையடுத்து எண்ணெய் கசிவுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணியில் துறை வல்லுநர்களை பயன்படுத்தாமல் மீனவர்களை பயன்படுத்துவதற்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்தநிலையில், எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் ஆயில் படிந்துள்ள இடங்களில் மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் சமூக ஆர்வலர்கள் மீனவ சங்க நிர்வாகிகளுடன் படகில் சென்று ஆய்வு செய்தார்.

காட்டுக்குப்பம் பகுதியில் இருந்து படகில் முகத்துவாரம் வரை சென்று ஆயில் படிந்த பகுதிகளை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமலஹாசன், இங்கு நான் பலமுறை வந்துள்ளேன். கடந்த காலத்தைவிட பாதிப்பு அதிகமாக தான் இருக்கிறது. நீதிமன்ற உத்தரவுப்படி இன்றுக்குள் எண்ணெய் கழிவு அகற்றுவது போல் ஒரு அறி குறியும் தென்படவில்லையென கூறினார்.

எண்ணெய் கழிவு விவகாரத்தில் ஒருவருக்கு ஒருவர் நான் இல்லை, நீ இல்லை என மாற்றி மாற்றி பழி போட்டு வருகின்றனர். எண்ணெய் கழிவு அகற்றுவதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. இங்குள்ள கழிவுகளை அகற்ற நிபுணர்கள் இல்லை. மீனவர்களே கழிவுகளை அகற்றி வருகின்றனர். எண்ணெய் கழிவை அகற்றும் வேலைக்கு வெறும் பாத்ரூம் பக்கெட்டை கொடுத்து அகற்றச் சொல்வது மனிதாபிமானம் அற்ற செயல். இந்த விவகாரத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை தேவை. கடுமையான சட்ட நடவடிக்கை இருந்தால் தான் அச்சம் ஏற்படும் என கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 405

    0

    0