கொட்டித் தீர்க்கும் கனமழை… குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு.. 2வது நாளாக குளிக்கத் தடை…!!

Author: Babu Lakshmanan
18 December 2023, 9:59 am

பல ஆண்டுகளுக்குப் பிறகு தொடர் கனமழை காரணமாக குற்றால பிரதான அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இருந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக, நேற்றைய தினமே குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தற்போது இரண்டாவது நாளாக தொடர் கனமழை காரணமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு பாறைகளே தெரியாத அளவிற்கு குற்றால அருவிகளில் கடும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அருவியை பார்ப்பதற்கு கூட காவல்துறையினர் பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுத்துள்ளனர்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!