சீரியலா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா.. தீயாய் பரவும் வீடியோவை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
18 December 2023, 12:15 pm

வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்துள்ளது மெகா சீரியல்கள். காலையில் ஆரம்பித்த சீரியல்கள் இரவு 11 மணி வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது

அதுவும் சீரியலுக்கு பிரபலமான சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி, கலர்ஸ், ஜீ டிவி என எல்லா டிவி சேனல்களும் தற்போது, சீரியல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து டிஆர்பியை எகிற வைத்து வருகின்றன.

ஆனால், ஆரம்பத்தில் எப்படி சீரியல்களால் இல்லதரசிகளை கட்டிப்போட்டதோ இன்னும் அப்படியே மாறாமல் உள்ளது சன் டிவி. சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்று முன்பெல்லாம் சன் டிவியை தான் கூறுவார்கள். ஆனால் இப்போது அனைத்து தொலைக்காட்சியிலும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

serial

தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மாமியார் கொடுமைகளை பார்த்து வருகிறோம். ஆனால், உலகத்தில் உள்ள அனைத்து மாமியார்களுக்கும் டப் கொடுக்கும் வகையில் தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஒரு சீரியலின் வீடியோ வைரலாகி வருகிறது.

அதாவது, அந்த மாமியார் மருமகளை கன்னத்தில் அறைந்து விடுகிறார். உடனே அந்த மருமகள் ரோலிங்கில் சென்று ஒரு துணியை தன்னுடைய கழுத்தில் சுற்றிக்கொண்டு ஏதோ மாமியார் அடித்ததால் தான் இப்படி ஆனது, என் உயிர் போகிறது என்பது போல் ஒரு ஆக்டிங் கொடுக்கிறார்.

அந்த மருமகளின் உயிரை காப்பாற்ற வீட்டில் உள்ள அனைவரும் போராடுகிறார்கள். இறுதியில், ஒருவர் கத்தரிக்கோளை வைத்து துணியை வெட்டி மருமகளை காப்பாற்றி விடுகிறார்கள். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ஏன்டா சும்மா ஓரமா தொங்கிட்டு இருந்த துணிய புடிச்சு கழுத்துல சுத்திட்டு சாவர மாதிரி அந்த பொண்ணு நடிக்குது. இதை ஒரு காட்சியா வேற எடுத்து வச்சிருக்கீங்களா இதற்கு ஒரு பரபரப்பு பின்னணி இசை வேற, இதுக்கு தமிழ் சீரியல்களே பரவாயில்லை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • Redin Kingsley and Sangeetha Announce Pregnantவீட்டுல விஷேசம்… குட்டி கிங்கிஸ்லி Coming Soon : வெளியான வீடியோ!
  • Views: - 436

    0

    0