ஜோதிகா இல்லன்னா சூர்யா ஜீரோ… அத சொல்லிக்கொடுத்ததே அந்தம்மா தான் – பயில்வான்!

Author: Rajesh
18 December 2023, 1:57 pm

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இவர்கள் ஒருவரும் காக்க காக்க திரைப்படத்தில் நடித்த பொது காதலித்து வந்தார்கள். அந்த படத்தில் வரும் ரொமான்ஸ் காட்சிகளில் உண்மையாகவே ரொமான்ஸ் செய்து வேற லெவல் கெமிஸ்ட்ரி கொடுத்தனர்.திருமணம், குழந்தைகள் என ஆனதும் ஜோதிகா நடிப்பில் இருந்து விலகி பின்னர் மீண்டும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களில் நடித்து கலக்கி வருகிறார். கடைசியாக அவர் நடித்த காதல் தி கோர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் ரீதியாக கலெக்ஷ்ன்ஸ் அள்ளியது.

இந்நிலையில் ஜோதிகா குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், ஆரம்பத்தில் இருந்தே சூர்யாவுக்கு நடிப்பு சார்ந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொடுத்ததே ஜோதிகா தானாம். ஜோதிகா மும்பையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் மிகவும் மாடர்னாக இருப்பார்.

அதனால் சூர்யாவுக்கு இது போன்ற உடைகளை அணி. இப்படி நட, சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடி என பலவிஷயங்கள் சொல்லிக்கொடுத்து அவரை சிறந்த நடிகர் ஆக்கினாராம். ஜோதிகாவின் அக்கறை தான் சூர்யாவுக்கு அவர் மீது காதல் மலர்ந்தது என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…