பிரபு மகளுக்கு நடந்த 2-ம் கல்யாணம்.. ஆதிக் ரவிச்சந்திரன் போட்ட அந்த மாதிரி கண்டிஷன்..!

Author: Vignesh
18 December 2023, 5:30 pm

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் பிரபல நடிகருமான பிரபு கொழுக் மொழுக் தோற்றத்தில் வெகுளியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழக மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக இவர் நடிப்பில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களே அதிகம். சங்கிலி திரைப்படத்தில் இருந்து நடித்துவரும் இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை வென்றார். இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவான சின்னத் தம்பி திரைப்படத்திற்காகப் விருது பெற்றார். அப்படத்தின் போது குஷ்புவுடன் காதல் வயப்பட்டு கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், அவரது காதலுக்கு அப்பா சிவாஜி எதிர்ப்பு தெரிவிக்கவே புனிதா என்ற வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா பிரபு என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் தற்போது இவரது மகள் ஐஸ்வர்யா சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் என்பவரை ரகசியமாக காதலித்து வந்துள்ளார். இந்த காதல் வீட்டிற்கு தெரியவர பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் டிசம்பர் 15ம் தேதி இன்று கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவர்களின் திருமணத்திற்கு நேரில் சென்று நடிகர் விஷால் வாழ்த்தும் கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக இப்போது, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளார். காரணம் இவர் மார்க் ஆண்டனி பட வெற்றியை தொடர்ந்து அஜித்தை வைத்து படம் இயக்க போவதாக தகவல் வந்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் ஐஸ்வர்யா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை இரண்டாம் திருமணம் செய்து கொண்டது சமூக வலைதளங்களின் தற்போது பேசு பொருளாக இருந்து வருகிறது. அந்தவகையில், சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஐஸ்வர்யா ஆதித் திருமணம் குறித்து பேசி உள்ளார். அதில் அவர், கூறுகையில் பிரபு ஐஸ்வர்யாவின் திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக மாநாடு போல் நடத்ததான் ஆசைப்பட்டார்கள்.

ஆனால், ஆதிக் ரவிச்சந்திரன் தரப்பிலிருந்து திருமணத்தை சிம்பிளாக வைத்துக் கொள்ளலாம் என கூறி கண்டிஷன் போட்டு இருக்கிறார்கள். அதனால், தான் திருமணம் சிம்பிளாக நடந்தது. இருந்தாலும், இது பேசக்கூடிய திருமணமாக மாறிவிட்டது. மேலும், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 500 கோடி வரதட்சணையாக கொடுத்திருக்கலாம் என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 410

    0

    0