காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? கண்டன ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி கேள்வி!!
Author: Udayachandran RadhaKrishnan18 December 2023, 7:44 pm
காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? கண்டன ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி கேள்வி!!
தர்மபுரியில் காவிரி உபர் நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் பேசிய போது காவிரி வழியாக வீணாக சென்று கடலில் கலக்கும் உபரி நீரை தர்மபுரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ஏரி குளம் குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளை நிரப்ப வேண்டும் என பல ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம்.
கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி இடமும் இது குறித்து கோரிக்கை முன்வைத்தோம் நிறைவேற்றுவார் என நம்பினோம் ஆனால் இல்லை. இதற்கு மாவட்டத்தில் 10 லட்சம் பேரிடம் கையொப்பம் பெற்று தந்தோம். எனவும் இந்த கோரிக்கையை நிறைவேற்றினால் குடிநீர் தட்டுப்பாடு வேலையின்மை பொருளாதாரம் முன்னேறும் என தெரிவித்தார்.
தற்போதுள்ள தமிழக முதல்வரிடம் கோரிக்கை குறித்து வலியுறுத்தி வருகிறோம் செவி சாய்க்கவில்லை, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மக்கள் பாவப்பட்ட மக்கள் அல்ல கோரிக்கை நிறைவேற்றாமல் தற்போதுள்ள தமிழக முதல்வர் சாதாரணமாக உள்ளார் எனவும் உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றி அறிவித்து திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதனால் வெளி மாவட்டத்தில் வேலைக்கு சென்றவர்கள் திரும்பி இந்த மாவட்டத்திலேயே தொழில் செய்வதற்கு வாய்ப்பு பெருகும் அடுத்த கட்ட போராட்டம் என்றால் ஒட்டுமொத்த மாவட்ட மக்களும் திரண்டு வருவார்கள்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்புமணி ராமதாஸ் ஒட்டுமொத்த மாவட்ட மக்களையும் முன்னேற்றக் கூடிய வகையில் உள்ள காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு என்ன தயக்கம் இருக்கிறது.
பருவநிலை மாற்றம் சம்பந்தமாக தமிழக அரசு அடுத்த 50 ஆண்டு காலத்திற்கு திட்டமிட வேண்டும் அடுத்த தேர்தலை என்ன வேண்டாம் எனவும், தமிழகத்தின் தென்கொடியில் வரலாறு காணாத வெள்ளம், அதேபோல கடந்த வாரம் சென்னையிலும் வெள்ளம் ஆனால் தர்மபுரியில் குடிப்பதற்கு தண்ணீர் கிடையாது இதுதான் தமிழ் நாட்டின் நிலை.
தொப்பூர் கணவாயில் விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசிடம் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தோம் – இதன் விளைவாகதான் மத்திய அரசு 775 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, இது முதற்கட்ட வெற்றி. ஆனால் இந்தத் திட்டத்தை தாங்கள் தான் பெற்று தந்தோம் என சொந்தம் கொண்டாடி வருகின்றனர் என தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மீது காட்டமாக பேசினார்.