மாப்பிள்ளை ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பிரபு கொடுத்த வரதட்சணை எத்தனை கோடி தெரியுமா?

Author: Rajesh
18 December 2023, 7:40 pm

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் பிரபல நடிகருமான பிரபு கொழுக் மொழுக் தோற்றத்தில் வெகுளியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழக மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக இவர் நடிப்பில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களே அதிகம். சங்கிலி திரைப்படத்தில் இருந்து நடித்துவரும் இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை வென்றார். இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவான சின்னத் தம்பி திரைப்படத்திற்காகப் விருது பெற்றார். அப்படத்தின் போது குஷ்புவுடன் காதல் வயப்பட்டு கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், அவரது காதலுக்கு அப்பா சிவாஜி எதிர்ப்பு தெரிவிக்கவே புனிதா என்ற வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா பிரபு என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அண்மையில் தான் மகள் ஐஸ்வர்யா மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் என்பவரை ரகசியமாக காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். டிசம்பர் 15ம் தேதி இன்று கோலாகலமாக நடந்த இத்திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

இந்நிலையில் புது மாப்பிளைக்கு நடிகர் பிரபு கொடுத்த வரதட்சணை குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆம், சொகுசு கார், பங்களா, மகளுக்கு நகை , நட்டு என தன் வசதிக்கு ஏற்ப சகலமும் செய்துகொடுத்துள்ளார் பிரபு. கிட்டத்தட்ட மொத்தம் ரூ. 500 கோடிக்கு வரதட்சணை கொடுத்திருப்பார் என கூறப்படுகிறது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?