சீனாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… உருக்குலைந்து போன கான்சு மாகாணம்… கொத்து கொத்தாக மக்கள் உயிரிழப்பு..!!

Author: Babu Lakshmanan
19 December 2023, 9:41 am

சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் 111 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது கன்சு மாகாணம். இந்த மாகாணத்தில் உள்ள ஜிஷிஷான் பகுதியை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியுள்ளது.

இதனால், கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இந்த இடிபாடுகளில் சிக்கிய 111 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலநடுக்கத்தால் கான்சு மற்றும் காங்காய் மாகாணங்களில் மின்சாரம், தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்