முன்கூட்டியே திமுக அரசு நடவடிக்கை எடுக்காததே மக்கள் பாதிக்க காரணம் : ஆய்வுக்கு பின் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2023, 8:42 pm

முன்கூட்டியே திமுக அரசு நடவடிக்கை எடுக்காததே மக்கள் பாதிக்க காரணம் : ஆய்வுக்கு பின் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் விமர்சனம்!

தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மீட்பு பணிகள் மிக மிகத் தொய்வாக நடைபெறுவதாகவும், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பொதுமக்கள் சிரமப்படுவதாகவும் தெரிவித்தார்.

கடந்த 14ஆம் தேதியே நான்கு மாவட்டங்களுக்கும் மிக கனமழை எச்சரிக்கை இந்திய வானிலை மையத்தால் அறிவிக்கப்பட்ட பின்பும் அரசு முயற்சி எடுத்திருந்தால் பொதுமக்கள் இந்த அளவு துயரத்திற்கு ஆளாகி இருக்க மாட்டார்கள் எனவும் அரசு இதனை செய்ய தவறிவிட்டது எனவும் முதல்வர் டெல்லி சென்றது பிரதமரை பார்ப்பதற்கு மட்டுமல்ல இந்தியா கூட்டணியில் கலந்து கொள்வதற்கும் சேர்த்து தான் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் மிக்ஜாம் புயலிலும் எந்த அதிகாரியும் முழுமையாக பணி செய்யவில்லை எனவும் ஆய்வு பணிகளை முறையாக மேற்கொள்ளாமல் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு நிவாரண பணிகளுக்கு ரூ.6300 கோடி தேவை என பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியது விளம்பரத்திற்காகதான். இது மிக வேடிக்கையாக உள்ளது என தெரிவித்தார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!