9வது படிக்கும்போதே உருகி உருகி காதலித்த டாப்ஸி – கழட்டிவிட்ட 10 வகுப்பு மாணவன்!

Author: Rajesh
20 December 2023, 7:45 pm

தமிழில் ஆடுகளம் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அந்த படத்தில் இவருக்கும் தனுஷுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனது. அதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சமீப நாட்களாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அழுத்தமான ரோலில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தற்போது 35 வயதாகும் டாப்ஸி பார்ப்பதற்கு இன்னும் அதே இளமையோடு தான் இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது முதல் காதல் குறித்த அனுபவத்தை குறித்து பேசியுள்ளார்.

taapsee pannu

என்னுடைய முதல் காதல் பள்ளிநாட்களில் தான் துவங்கியது. நான் 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது 10 வகுப்பு மாணவர் ஒருவரை உருகி உருகி காதலித்தேன். அத சமயத்தில் நினைத்த நேரத்தில் பேசும்படி செல்போன் எல்லாம் இல்லை. தெரு முனையில் இருக்கும் டெலிபோன் பூத்திற்கு சென்று தான் பேசவேண்டும்.

taapseepannu

முதலில் அவருக்கும் என் மீது இன்ட்ரெஸ்ட் இருந்தது. பின்னர் நான் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும் என்று என் காதலை உதறிவிட்டார். என்னையும் படிப்பில் கவனம் செலுத்த சொன்னான். அதனால் அந்த காதல் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அதன் பின்னர் நான் மிகவும் அழுதேன். அந்த நினைவுகளில் இருந்து மீண்டு வர நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்றார்.

  • sv shekher shared the test movie poster and criticize it on his x platform என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா இதான் கதி- நயன்தாரா படத்திற்கு எஸ்.வி.சேகர் விட்ட சாபம்…