தனுஷ் படத்தில் ஹீரோயின் ஆகும் அனிகா… கோலிவுட்டின் பரபரப்பான தகவல்!

Author: Rajesh
20 December 2023, 9:38 pm

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அனிகா கேரளா மாநிலத்தை சேர்ந்த அழகான குழந்தையாக திரைத்துறையில் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் விஸ்வாசம் படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவரை அஜித்தின் ரீல் மகள் என்று அழைத்து வருகின்றனர். மேலும் சிலர் குட்டி நயன்தாரா என்றும் அழகைக்கப்பட்டு வருகிறார்.

Anikha-Surendran-updatenews360

என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் இவர் மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்ரால், ஜெயம் ராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருக்கிறார்.

anikha surendran - updatenews360

தற்போது அனிகா பல படங்களில், கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இவர் முதன்முதலாக 2020 ஆம் ஆண்டு வெளியான கப்பேலா என்ற ரீமேக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். புட்ட பொம்மா என்ற படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதன் பின்னர் ஓ மை டார்லிங் என்ற படத்தில் லிப் லாக் படுக்கையறை காட்சிகளில் நடித்து மோசமான விமர்சனத்திற்கு ஆளாகினார்.

anikha surendran - updatenews360

இந்நிலையில் தற்போது தனுஷின் படத்தில் அனிகா ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளாராம். ஆம், தனுஷ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக நடிக்கிறாராம். படத்தின் ஹீரோவாக தனுஷ் தன்னுடைய அக்கா மகனை அறிமுகப்படுத்தியுள்ளாராம்.

anikha dhanush

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. இப்படத்தில் சரத்குமார் முக்கியமான ரோலில் நடிக்கிறார். தமிழில் தனுஷ் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகும் அனிகாவை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

  • Anirudh updates on Vidamuyarchiஅனிருத் வெளியிட்ட “விடாமுயற்சி” மாஸ் அப்டேட்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
  • Views: - 566

    0

    0