50 வயதிலும் டப் கொடுக்கும் விசித்ராவின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா.. வெயிட் பார்டிதான் போல..!

Author: Vignesh
21 December 2023, 12:45 pm

விசித்ரா முன்பு போல் , பழைய மாதிரி மீண்டும் கவர்ச்சி வேடங்களில் நடிக்க அவருக்கு ஆர்வம் இல்லையாம். தன்னுடைய உடல்வாகுக்கு ஏற்ற மாதிரி, போலீஸ் அல்லது தொழிலதிபர் போன்ற வேடங்களில் நடிக்க அவர் ஆர்வமாக இருக்கிறாராம்.

1990- களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை விசித்ரா. திருமணத்துக்குப் பிறகு வியாபாரத்தில் பிஸி ஆனதால் நடிப்புக்கு முழுக்கு போட்ட விசித்ராவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

vichithra-updatenews360

தமிழில் கவர்ச்சியில் மட்டுமின்றி குணச்சித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கியவர் நடிகை விசித்ரா. ரசிகன், முத்து, வீரா என இவர் நடித்த வெற்றிப்படங்கள் அதிகம். 17 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் பட வாய்ப்புகளைத் தேடும் பணியை அவர் தொடங்கியுள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராசாத்தி சீரியலில் நடித்துள்ளார்.

vichithra-updatenews360

அவ்வப்போது, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனிடையே, பல சர்ச்சைகளில் சிக்கி பின் அதிலிருந்து மீண்டு வந்த விசித்ரா தற்போது பிக்பாஸ் 7 சீசனில் கலந்து கொண்டு போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் விசித்ராவுக்கு ஒரு நாளைக்கு 40,000 வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்றுள்ளாராம். பிக் பாஸ் போட்டியாளர்களில் அதிக சம்பளம் பெறும் போட்டியாளர் இவர்தான் என்றும் கூறப்படுகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 340

    0

    0