இந்த கெட்டப்ல சூப்பரா இருக்கீங்க.. அவர் குடுத்து வச்சவர் பிரபல நடிகையிடம் அப்படி பேசிய ரஜினி..!

Author: Vignesh
21 December 2023, 6:25 pm

கர்நாடக மாநிலத்தில் பிறந்து, வளர்ந்து தமிழக மக்களின் மனங்களில் நிரந்தர இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் கடந்து வந்த பாதை மிக கடினமானது. திரைத்துறையில் ஜெயிக்க வேண்டும் என்றால் பளபளப்புடன் கூடிய தேஜசான உடல் தோற்றத்தோடு, வெள்ளையாக இருக்க வேண்டும் என்கிற ஃபார்முலாவையே மாற்றியவர் என்றால் அது ரஜினிகாந்த் தான். இந்த வயதிலும் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சினிமாவில் டப் கொடுத்து வருகிறார். வசூல் நாயகனாகவும், ரஜினிகாந்த் டாப்பில் இருக்கிறார்.

இந்நிலையில், ஜெய் பீம் பட இயக்குனர் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். தற்போது, ரஜினிகாந்த் குறித்து ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், அண்ணாமலை படத்தில் வயதான கதாபாத்திரத்தில் ரஜினியும் குஷ்பூ நடித்திருப்பார்கள். இதில், குஷ்பூ வயதான கெட்டப்பில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தபோது, ரஜினி குஷ்பூவை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தாராம்.

rajini - updatenews360

அப்போது குஷ்பூ ஏன் அப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு ரஜினிகாந்த் உங்களை திருமணம் செய்பவர் ரொம்ப கொடுத்து வைத்தவர். ஏனென்றால், இந்த வயதான கெட்டப்பிலும் நீங்கள் படு சூப்பராகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று ரஜினிகாந்த் தெரிவித்தாராம்.

rajini - updatenews360
  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!