பெண்களின் ஒவ்வொரு அங்கத்தையும் விரும்பி ரசிப்பேன்…. ஓப்பனாக கூறிய சாய்பல்லவி!

Author: Rajesh
21 December 2023, 9:04 pm

நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.

இந்நிலையில் சாய்பல்லவி சமீபத்திய பேட்டி ஒன்றில் எனக்கு ஆண்களை விட எனக்கு பெண்களை தான் அதிகம் பிடிக்கும். ஒவ்வொரு பெண்களும் வித்யாசமான உடை அணிவது, வித விதமாய் ஹேர்ஸ்டைல் செய்வது, கண் அழகு என ஒவ்வொன்றையும் நான் ரசிப்பேன். ஆனால், ஆண்கள் என்றால் அப்படி இல்லை பேண்ட் சட்டை அவ்வளோவ் தான். எனவே பெண்கள் ஆண்களை காட்டிலும் ஒவ்வொரு விஷயத்திலும் அழகு என சாய்பல்லவி அந்த பேட்டியில் கூறினார்.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!