90களில் பிரபலமான நடிகரான ராஜாவா இது? ஐயோ பாவம் இப்படி ஆகிட்டு இருக்காரே!
Author: Rajesh22 December 2023, 9:21 am
80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் கலக்கியவர் நடிகர் ராஜா. இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 1981ஆவது ஆண்டில் பாக்குவெத்தலை திரைப்படத்தில் அறிமுகமான இவர் 1980களின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தார்.
அத்துடன் தமிழின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த்தின் மாப்பிள்ளை, கமல்ஹாசனின் சதிலீலாவதி உள்ளிட்ட ஹிட் திரைப்படங்களில் முக்கிய ரோல்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். மேலும், “கருத்தம்மா” என்ற படத்தில் நடித்ததன் மூலம் 90ஸ் கிட்ஸ் மத்தியில் ஆழமாக பதிந்தவர் நடிகர் ராஜா.
இவரது நடிப்பு அனைவரையும் கவந்தராலும் ஒரு கட்டத்தில் புதுமுக நடிகர்களின் ஆதிக்கம் அதிகரிக்க ராஜாவின் மார்க்கெட் குறைந்தது.பின்னர் சில ஆண்டுகள் கிடைத்த ரோல்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் மீடியா வெளிச்சமே படாமல் ஆள் அட்ரஸே இல்லாமல் போனார்.
இந்நிலையில் பல வருடத்திற்கு பின்னர் நடிகர் ராஜா அண்மையில் ஒரு பேட்டி ஒன்று பேசியிருக்கிறார். அதில் ஆளே அடையாளம் தெரியாமல் நரைமுடி, மீசை , தாடி என வேற மாதிரி இருக்கிறார். அவரை பார்த்து ரசிகர்கள் 90ஸ்களில் சினிமாவை கலக்கிய நடிகர் ராஜாவா இது..? என்று ஆச்சரியமாக பார்த்து அந்த புகைப்படத்தை இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.