விரைவில் கோவை பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் திறப்பு – கழுகுப்பார்வை காட்சிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 December 2023, 3:01 pm

விரைவில் கோவை பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் திறப்பு – கழுகுப்பார்வை காட்சிகள்!!

பெரியநாயக்கன்பாளையம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு ரூ.115 கோடி மதிப்பில் 1,882 மீட்டர் தூரம் நீளம், 17.60 மீட்டர் அகலத்தில் 48 தூண்களைக் கொண்டு 4 வழித்தட போக்குவரத்து கொண்ட மேம்பாலம் கட்ட பணிகள் 2020 நவம்பரில் துவங்கியது.

இந்த பெரியநாயக்கன் பாளையம் மேம்பாலம் பணிகள் KCP Infra Limited., நிறுவனத்தால் நடைபெற்று வருகிறது. பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பு மேம்பாலம் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கி எல்.எம்.டபிள்யூ சந்திப்பு, பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பு ஆகியவற்றை கடந்து வண்ணான்கோவில் சந்திப்பில் முடிகிறது. இந்த பாலத்தால் 3 சந்திப்புகளிலும் போக்குவரத்து நெரிசல் குறையும்.

கடந்த 3 வருடங்கமாக பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் பாலத்தில் சோதனை ஓட்டம் துவங்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு பாலம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வரும் 7ஆம் தேதி பெரியநாயக்கன் பாளையம் பாலம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளுது. இது வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!