வரலட்சுமியை எட்டி உதைத்த பிரபல நடிகர்… பாலாவின் படத்தில் இவ்வளவு கொடுமையா?

Author: Rajesh
22 December 2023, 5:12 pm

கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

varalakshmi sarathkumar-updatenews360

இதன் பிறகு விஷால் உடன் காதல் இருந்ததாக தகவல் வெளியாகி அதுவும் முடிவுக்கு வந்தது. பின்னர் வெளியான ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் நெகட்டிவ் கேரக்டரை ஏற்று நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.

குறிப்பாக பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமியின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. விருது விழா ஒன்றில் அதுகுறித்து பேசிய இயக்குனர் பாலா….. அப்படத்தில் நடித்தபோது சண்டை காட்சி ஒன்றில் படத்தின் வில்லன் ஆர் கே சுரேஷ் வரலட்சுமியின் தோள்பட்டையில் எட்டி உதைக்கவேண்டும். ” நான் ஷார்ட் சரியாக வரவேண்டும் என்று கத்தியதால் அவர் முதல் ஷாட்டிலே ஓங்கி மிதித்துவிட்டார்.

director bala

அதில் வரலட்சுமியின் கை எலும்பு முறிந்துவிட்டது. பின்னர் 2- 3 டேக் எடுத்தோம். அவர் அதை யாரிடமும் சொல்லாமல் மீண்டும் ஷூட்டிங் வந்தபோது ஸ்கேன் ரிப்போர்ட் காட்டினார். இது என்னமா சிஜியா ? என கேட்டு கிண்டல் அடித்தேன். அதற்கு அவர் உண்மையிலே எலும்பு க்ராக் ஆகிடுச்சு சார் என வருத்தமாக கூறினார். எனவே வரலக்ஷ்மி அவ்வளவு டெடிகேஷனான நடிகை. எனக்கு அவரை தான் மிகவும் பிடிக்கும் என்றார் இயக்குனர் பாலா.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 390

    0

    0