விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரி.. பாலத்தில் பற்றி எரிந்த கார் : உயிர்தப்பிய 4 பேர்!!
Author: Udayachandran RadhaKrishnan23 December 2023, 2:53 pm
விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரி.. பாலத்தில் பற்றி எரிந்த கார் : உயிர்தப்பிய 4 பேர்!!
கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற சொகுசு கார் ஒத்தக்கால் மண்டபம் மேம்பாலத்தில் மேலே சென்ற பொழுது முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி திடீரென பிரேக் பிடித்ததால் பின்னால் சென்ற சொகுசு கார் பின்புறம் பலமாக மோதியது.
இதையடுத்து மோதிய வேகத்தில் உடனடியாக தீப்பிடித்தது. இதனை அறிந்த இளைஞர்கள் உடனடியாக நால்வரும் காரில் இருந்து இறங்கி கிணத்துக்கடவு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வாகனம் தீயில் எரிந்து கொண்டிருந்த வாகனத்தை தீயை அணைத்தனர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த செட்டிபாளையம் காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரியை சி.சி.டி.வி கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர்.
அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த இளைஞர்கள் உயிர் தப்பினர்.இவர்கள் கோவையில் உள்ள டைட்டில் பார்க்கில் வேலை செய்து வருவதாகவும் கோவையில் இருந்து வால்பாறைக்கு சுற்றுலா சென்றதாகவும் தெரிய வருகிறது. பாலத்தின் மேல் சென்ற சொகுசுக்கர் விபத்தில் தீ பிடித்த எரிந்தது சிறிது நேரம் கோவை பொள்ளாச்சி மெயின் ரோட்டில் போக்குவரத்து தடை ஏற்பட்டது.