படுக்கையறை விஷயத்தில் எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் அதிகம்… வெட்கமே இல்லாமல் கூறிய ஆண்ட்ரியா!

Author: Rajesh
23 December 2023, 3:40 pm

தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் ஆண்ட்ரியா. இவர் முதலில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். வெஸ்டர்ன் பாடல்கள் பாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டும் ஆண்ட்ரியா படங்களில் மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.

தமிழில் தொடர்ந்து சில வெற்றிப்படங்களில் நடித்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஆண்ட்ரியா தமிழை தாண்டி தெலுங்கு படங்களிலும் பாட்டு பாடி உள்ளார். அத்துடன் வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன் மூலம் அவருக்கு மார்க்கெட்டும் உயர்ந்தது. இன்றளவும் சரிவை சந்திக்காமல் அப்படியே ஹிட் ஹீரோயின் என்ற இடத்தை தக்கவைத்திருக்கிறார் ஆண்ட்ரியா.

இவரின் சிறந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது. ஆம், பிரபல அரசியல் வாரிசு நடிகரின் காதல் வலையில் சிக்கி ஏமாந்துவிட்டார். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஆண்ட்ரியா சில வருடங்கள் திரைப்படங்களில் நடிக்கமால் இருந்து வந்தார்.

அதன் பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்கில் இறங்கி நடிப்பு, பாடல் என படு பிசியாக இருந்து வருகிறார். இதனிடையே இசையமைப்பாளர் அனிருத்தை ரகசியமாக காதலித்தார். இந்நிலையில் ஆண்ட்ரியா இயக்குனர் அமீர் உடன் வட சென்னை படத்தில் நடித்த ரொமான்ஸ் காட்சிகள் குறித்து பேட்டி ஒன்றில் பேசினார். அப்போது அது போன்ற நெருக்கமான மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடிக்க அமீர் மிகவும் வெட்கப்பட்டார்.

ஆனால், எனக்கு அப்படி இல்லை. அந்த விஷயங்களில் நான் ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ். நிறைய படங்களில் வித விதமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்த அனுபவம் எனக்கு அதிகம் உண்டு. எனவே வடசென்னை படத்தில் ராஜனுடன் ரொமான்ஸ் செய்ததில் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை என ஆண்ட்ரியா வெளிப்படையாக கூறினார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!